சென்னையில் ரூ.270 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை நோக்கியா நிறுவனம் அமைக்கவுள்ளதாக தமிழக வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தொலைத்தொடர்பு துறையில் தமிழகத்தின் ஆளுமை வலுப்பெறுவதுடன், 200 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில்நுட்ப கட்டமைப்பிற்காக தமிழ்நாட்டை நோக்கியா தேர்வு செய்திருப்பது மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக கருதப்படுகிறது.