'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் ஜூன் - செப்டம்பர் கோடைக் கால பருவமழை மத்திய, வட மாநிலங்களில் பெருமளவு குறைந்து கடும் வறட்சி ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம் தென் மாநில கடலோரப் பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை வழக்கத்தை விட 2°C மேல் அதிகரிக்கும் இந்நிகழ்வு, இந்தியப் பருவமழைப் போக்கை மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.