வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

2551பார்த்தது
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவ பயிற்சி நிறைவடைந்த நிலையில், வடகொரியா இன்று (செப்.12) ஜப்பான் கடல் பகுதியை நோக்கி பல ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது. எதிரி நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இச்சோதனையால் கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி