தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பை விட 3 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழையின் போது சில நாட்கள் மழை குறைவது இயல்பானது என்றும், இந்த இடைவெளிக்குப் பிறகு மழை மீண்டும் வலுப்பெறும்' என்றும் தெரிவித்துள்ளார்.