தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 16-18 ஆம் தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தீபாவளி அன்று கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும்.