சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, விண்வெளி வீரர் ஜோனி கிம், நார்வே மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் தோன்றும் Northern Lights-ஐ (வடக்கு ஒளி) வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், பச்சை நிற ஒளியுடன் கூடிய Northern Lights-ஐ தொடர்ந்து, இரவு நேரத்தில் பல நகரங்களின் மின்னொளியும் ஜொலிக்கும் காட்சி அழகாகப் பதிவாகியுள்ளது. விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, Northern Lights எப்படி இருக்கும் என்பதை இந்தக் காணொளி தெளிவாகக் காட்டுகிறது.