மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் மக்களவை செயலரிடம் வழங்கப்பட்டது. பிரதமரை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி செய்ததாக கூறியதால் ஓம் பிர்லா சர்ச்சைக்குள்ளான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.