தமிழகத்தில் டாஸ்மாக் பார்களில் இனி உணவு கூடங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும், இதற்கான புதிய டெண்டர் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் விடப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (செப்.17) பேட்டியளித்த அவர், பார்களில் பிரத்யேக உணவு கூடங்கள் அமைக்கப்படும்போது அங்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை அரசு அதிகாரிகளால் முறையாக ஆய்வு செய்ய முடியும் என கூறியுள்ளார்.