இனி Flipkart-ல் சாப்பாடு ஆர்டர் செய்யலாம்.. புதிய சேவை

4பார்த்தது
இனி Flipkart-ல் சாப்பாடு ஆர்டர் செய்யலாம்.. புதிய சேவை
ஆன்லைன் வணிக நிறுவனமான பிளிப்கார்ட், உணவு விநியோக சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, இம்மாத மத்தியில் பெங்களூருவில் உணவு டெலிவரி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உணவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் வகையில் புதிய தளத்தை பிளிப்கார்ட் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்த கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பிற மெட்ரோ நகரங்களிலும் சேவையை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி