மத்திய அரசின் 'Bharat Connect' தளத்தின் வாயிலாக வாட்ஸ்அப் செயலியிலேயே பயன்பாட்டுக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மின்சாரம், சமையல் எரிவாயு, FASTag, காப்பீடு, கடன் தவணை உள்ளிட்ட 30 பிரிவுகளில், 22,722-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கட்டணங்களை UPI, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாட்ஸ்அப்பிலேயே மக்கள் எளிதாகச் செலுத்த முடியும்.