தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் இன்று (பிப்.9) நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து, அதற்கான ஆதரவு கடிதத்தை வழங்கினார். மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.