“ரேஷன் கடைகளில் நம்பர் 1 அரிசி வழங்கப்படும்”.. இபிஎஸ் வாக்குறுதி

28பார்த்தது
“ரேஷன் கடைகளில் நம்பர் 1 அரிசி வழங்கப்படும்”.. இபிஎஸ் வாக்குறுதி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சங்ககிரி தொகுதிப் பரப்புரையில் பேசிய அவர், “அதிமுக ஆட்சி அமைந்ததும் மளிகைக் கடைகளில் கிடைப்பது போன்ற உயர்தர அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படும். இனி மக்கள் தனியாகக் காசு கொடுத்து அரிசி வாங்கத் தேவையில்லை. எத்தனை ஆயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை, ஏழைகளுக்காக இந்தத் திட்டத்தை அதிமுக நிச்சயம் நிறைவேற்றும்” என வாக்குறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி