டீசல் விலை உயர்வால் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு.. மக்கள் போராட்டம்

6307பார்த்தது
டீசல் விலை உயர்வால் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கை குறைப்பு.. மக்கள் போராட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரில் பக்ரீத், முகூர்த்த நாட்கள் என மக்கள் அதிகம் பயணிக்கும் நாளில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என மக்கள் நேற்றிரவு (மே.26) போராட்டத்தில் ஈடுபட்டனர். டீசல் விலை உயர்வால் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். கோவை மாநகரில் தாழ்த்தளப் பேருந்துகள் சேவையின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் தினசரி சிரமத்தை சந்திக்கின்றனர்,

தொடர்புடைய செய்தி