சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

0பார்த்தது
சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
தமிழக சட்டமன்றத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனிப்பெரும் கட்சியான தவெக-வில் அதிகபட்சமாக 13 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக-வில் 6 பேரும், காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிற கட்சிகளில் தலா ஒருவரும் உள்ளனர். 59 இடங்களை வென்றுள்ள திமுக-வில் ஒரு பெண் எம்.எல்.ஏ. கூடத் தேர்வாகவில்லை. மொத்த வாக்காளர்களில் 51% பெண்கள் இருந்தும், சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது தமிழக வரலாற்றில் 3-வது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி