ஜெர்மனியின் வுர்செலன் மருத்துவமனையில் பணியாற்றிய 44 வயது ஆண் செவிலியர், இரவு நேரப் பணிச்சுமையைக் குறைக்க நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி, தூக்க மருந்து கொடுத்ததில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் 27 பேரை இதே போன்று கொல்ல முயன்றதாக ஆச்சென் பிராந்திய நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் நன்றாக தூங்கவே இதை செய்தேன் என குற்றவாளி சொல்லியும், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டது.