மதிமுக கூட்டணிக்கு வர தயாராக இல்லை என ஓபிஎஸ், ஜெயலலிதாவிடம் கூறியதால் 15 தொகுதி, 1 ராஜ்யசபா சீட்டு கிடைக்காமல் போனது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (நவ.07) கூறியிருந்தார். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஓபிஎஸ், "ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் உடனிருந்து பயணித்துள்ளேன். ஜெயலலிதா பேசுமாறு கூறியதை தான் நான் பேசியுள்ளேன்" என கூறினார்.