சுமார் ரூ.7 கோடி என்ற மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான ஹாலிவுட் திரைப்படமான 'Obsession', வெளியான வெறும் 20 நாட்களில் ரூ.955 கோடி வசூலித்து உலகளவில் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், முதல் நாளில் ரூ.1.75 கோடியும், 2-ம் நாளில் ரூ.2.31 கோடியும் வசூலித்துள்ளது. தன் தோழியை காதலிக்க வைக்க அமானுஷ்ய பொருள் ஒன்றை வாங்கும் இளைஞனின் கதையே இப்படம் ஆகும்.