இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவு

மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகள் அக்.21-ம் தேதி மூடப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சி கடைகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயின் கோவில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
