ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸுக்கு 352 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

6பார்த்தது
ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸுக்கு 352 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
நியூ சண்டிகரில் உள்ள பிசிஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.3) நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் K.L.ராகுலின் அதிரடி சதம் (87 பந்துகளில் 129 ரன்கள்) மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் (92 ரன்கள்) உறுதுணையாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்தி