கேரளாவின் இடுக்கி மாவட்டம் முல்லை பெரியாறு அணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அணையில் இறங்கி குளியலில் ஈடுபட்ட யானை ஒன்று அதிகாரிகளின் சத்தம் கேட்டு உடனே கரைக்குச் சென்று வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை பெய்துவரும் நிலையில், அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.