புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸ் பங்கேற்ற பேருந்து வழித்தட நீடிப்பு சேவை தொடக்க விழாவில், பேருந்துக்கு தவெக கொடி வண்ணத்தில் ரிப்பன் கட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரிப்பன் உடனடியாக மாற்றப்பட்டு, பின்னர் அமைச்சர் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.