ஓலா, ஊபர், ரேபிடோ ஓட்டுநர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

3031பார்த்தது
ஓலா, ஊபர், ரேபிடோ ஓட்டுநர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்
ஓலா, உபர், ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் நாளை (பிப்.07) முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தொழிற் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், "ஆட்டோ, டாக்ஸி, பைக் டாக்ஸிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக குறைந்தபட்ச அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி