ராணிப்பேட்டை அருகே தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்த 70 வயது மூதாட்டி ஒருவரை நேற்று (நவ.25) நள்ளிரவில் மர்ம நபர்கள் தாக்கி நகைகளை திருடி சென்றுள்ளனர். அவர் காதில் அணிந்திருந்த கம்மலை பறிக்கும் கொடூர முயற்சியில், அந்த மூதாட்டியின் காதுகளை அறுத்துள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த மூதாட்டி, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.