லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

27பார்த்தது
லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி