எகிறிய ஆம்னி பேருந்து கட்டணங்கள்: சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

0பார்த்தது
எகிறிய ஆம்னி பேருந்து கட்டணங்கள்: சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் தேவையை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ.3,000 வரையிலும், நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு ரூ.3,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சூழலில், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி