தேர்தல் வாக்குப்பதிவிற்காக மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதைப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து நெல்லைக்கு ரூ.3,000, மதுரைக்கு ரூ.3,500, தூத்துக்குடிக்கு ரூ.3,200, திருச்சிக்கு ரூ.2,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முக்கிய காலங்களில் இவ்வாறு கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.