ஆம்னி பேருந்து போராட்டம் தொடரும்: வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

9பார்த்தது
ஆம்னி பேருந்து போராட்டம் தொடரும்: வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
வெளி மாநிலங்களில் ஆம்னி பேருந்துக்கு வரி விதிப்பதை கண்டித்து, தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். சென்னையில் இன்று (நவ. 12) செய்தியாளர்களை சந்தித்த ஆம்னி உரிமையாளர்கள், வரி உயர்வை திரும்ப பெறும்வரை போராட்டம் நீடிக்கும் என தெரிவித்தனர். இந்த வேலை நிறுத்தத்தால் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.