கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இனி இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, கடந்த 7 நாட்களுக்கும் மேலாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த விவகாரத்தைத் தீர்க்க உடனடியாக முதலமைச்சர் தலையிட வேண்டும் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.