தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. கேரள போக்குவரத்து துறையால் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை கண்டித்து பேருந்து ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்து ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், கேரளாவிற்கு சென்றால் தங்கள் பேருந்து பறிமுதல் செய்யப்படலாம் என பேருந்து உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.