கேரளா: பத்தனம்திட்டாவில், நிலக்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தான். நேற்று காலை 10 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. குழந்தையின் உணவுக்குழாயில் நிலக்கடலை சிக்கியிருப்பதை அறியாமல் தாய்ப்பால் கொடுத்த நிலையில்,
மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை. ஆரம்பத்தில் தாய்ப்பால் சிக்கியதாக நினைத்த நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னரே நிலக்கடலை சிக்கியிருப்பது தெரியவந்தது.