தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் டெண்டர், கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 8 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில், மலர்விழி என்ற மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.