புதுச்சேரி வீராம்பட்டினத்தில் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற தனியார் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு கவசங்கள் இன்றி ஆபத்தான முறையில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோரை மீனவர்களும், போலீசாரும் இணைந்து துரிதமாக மீட்டனர். விதிகளை மீறி சட்டவிரோதமாக படகு இயக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.