இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் மட்டும் 5,737 வரதட்சணை கொடுமை மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது சராசரியாக ஒவ்வொரு 90 நிமிடங்களிலும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கிறார் அல்லது தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் அதிகரித்தாலும் வரதட்சணை என்ற சமூகக் கொடுமை இன்னும் பல குடும்பங்களின் உயிரைக் காவுகொண்டு வருவது கவலைக்கிடமான உண்மையாகும்.