சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் வடமாநில இளைஞர் சூரஜ் உயிரிழந்ததால் அவரது மனைவி பிரியங்கா கதறி அழுத சோகம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த சூரஜுக்கு எவ்வித உடல்நல பாதிப்பும் இல்லை. கடும் வெயிலில் மயங்கி விழுந்து, வலிப்பு ஏற்பட்டு சூரஜ் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் நண்பர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.