ஆந்திர மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் தடூர் மண்டல் சிவரு மல்காபூர் சாலையைச் சேர்ந்த தொழிலாளி ஹுசைன் (55), என்பவர் பருத்தி அறுவடை வேலைக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டர் டயர் அவர் மீது ஏறியதால், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.