பாம்புக்கடியால் உலகளவில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒருவர் உயிரிழப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Strike Out Snakebite அமைப்பின் ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார் 1.38 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர்; இதில் பாதி உயிரிழப்புகள் இந்தியாவிலேயே நிகழ்கின்றன. இது கவனிக்கப்படாத பெரிய சுகாதார நெருக்கடி என்றும், பாம்புக்கடி சமூக சமத்துவமின்மையின் வெளிப்பாடு என்றும் கூறியுள்ளது.