வெங்காயம், சர்க்கரை விலை உயர்வு: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

3030பார்த்தது
வெங்காயம், சர்க்கரை விலை உயர்வு: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
பணவீக்கத்தால் பண்டிகைக்கால மகிழ்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மோடி அரசு வாரந்தோறும் மக்களின் பாக்கெட்களில் தாக்குதல் நடத்துவதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' பக்கத்தில், குற்றம் சாட்டியுள்ளார். அதில், கடந்த 3 வாரங்களில் வெங்காயத்தின் மொத்த விலை இரு மடங்காகவும், சர்க்கரை விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் தாக்கத்தை மறைக்க அரசு புள்ளிவிவர வித்தைகளில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி