தவெக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று (பிப்.6) தொடங்கியது. ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் ஒரே நேரத்தில் அலுவலகத்தில் திரண்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, விருப்ப மனுக்களை பெற இனி யாரும் நேரில் வர வேண்டாம் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கட்சியின் இணையதள பக்கத்திலிருந்து மனுவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.