ரூ.21,000 முதலீடு செய்தால் மும்மடங்கு லாபம் கிடைக்கும் என கூறி,
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் போலி AI வீடியோக்களை பயன்படுத்தி ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் சைபர் கிரைம் கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. எனவே, இதுபோன்ற போலி விளம்பரங்களையும் அதிக லாபம் தருவதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு ஆசைகளையும் நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என மத்திய அரசு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.