தமிழகத்தில் சிறப்புத் தீவிர திருத்தம் பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுவது தவறு என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (நவ. 24) தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்களில், 869 பேர் மட்டுமே வாக்குரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றும், மற்றவர்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், திமுக உள்ளிட்ட கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.