அடல்ட் கண்டெண்ட் தளமான ‘Only Fans’ நிறுவன உரிமையாளரான லியோனிட் ராட்வின்ஸ்கி (43), புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். நீண்ட காலம் சிகிச்சையில் இருந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அவரது நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டில், உக்ரேனிய-அமெரிக்க தொழில்முனைவோரான இவர், OnlyFans தளத்தின் தாய் நிறுவனமான 'Fenix International'-ஐ, அத்தளத்தின் பிரிட்டிஷ் நிறுவனரான டிம் ஸ்டோக்லியிடமிருந்து விலைக்கு வாங்கினார்.