தமிழக வெற்றிக் கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பொறுப்பு அளிக்கப்படுகிறது என மகளிர் அணியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பணம் கொடுத்தால் தான் இந்த பொறுப்பில் இருக்க முடியும். பணம் கொடுக்க முடியவில்லை என்றால் பொறுப்பை விட்டு போய் விடுங்கள் என்று மாவட்ட செயலாளர் கூறுகிறார் என மகளிர் அணியினர் புலம்பி வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் கட்சி பின்னடைவை சந்திக்கும் உடனே தலைமை தலையிட வேண்டும் என தொண்டர்கள் கூறிவருகின்றனர்.