வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 3) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் அறிவித்துள்ளார். விடுமுறை அறிவிப்பு கல்லூரிகளைச் சாராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.