அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் (OP) பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை தவிர்க்க ஆன்லைன் OP சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். செயலி மூலம் முன்பதிவு செய்து, மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே OP சீட்டு பெற ஏற்பாடு செய்யப்படுகிறது.