மண்டல கால பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். இனி வரும் அனைத்து நாட்களிலும் அதிகாலை 3 முதல் மதியம் 1 வரையும், பிற்பகல் 3 முதல் இரவு 11 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் ஆன்லைன் மூலம் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.