திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு இன்று (டிச.30) அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நம்பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.