தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஏற்கனவே 193 எம்.பி-க்கள் கையெழுத்திட்டு அளிக்கப்பட்ட நோட்டீஸ், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இரு அவைகளிலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய குற்றச்சாட்டுகளுடன் நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.