காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு ரூ.5,900 கோடி செலவில் அணை கட்ட ஆயத்தமாகி வரும் நிலையில், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஜூன் 2-ம் தேதி சென்னையில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். இந்த அணை கட்டப்பட்டு 68 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்பட்டால், அது உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமாக அமைவதோடு மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வராமல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் வறண்டுவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.