சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையால் கடந்த 2020இல் கைது செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் அப்ரூவராக மாறியுள்ளார். இதற்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்ய அவர்கள் சார்பாக மதுரை கோர்ட்டில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.