அரசு டாஸ்மாக் மதுக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை அம்பத்தூரில் இன்று (ஜன., 06) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் சங்கத்தினர், மதுபாட்டிலில் விலையை மாற்றம் செய்த பிறகு காலி பாட்டிலை திரும்பப் பெற ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், காலி பாட்டில்கள் கொள்முதல் செய்ய மாற்று வழியை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.